Oct 17, 2026
Thisaigal NewsYouTube

புதிய சட்டத்துறை தலைவராக முகமட் டுசுக்கி மொக்தார் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புதிய சட்டத்துறை தலைவராக முகமட் டுசுக்கி மொக்தார் நியமனம்

புத்ராஜெயா, நவ. 11-


நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக டத்தோ முகமட் டுசுக்கி மொக்தார் நியமிக்கப்பட்டுள்ளார். முகமட் டுசுக்கி மொக்தாரின் நியமனத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் r இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கும் டான்ஸ்ரீ அகமட் தெர்ரிருடீன் முகமட் முகமட் சலேவிற்கு பதிலாக நாட்டின் சட்டத்துறையை கையாளும் மிகப்பெரிய பொறுப்பு டுசுக்கி மொக்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 145 ஆவது விதியின் கீழ் டுசுக்கி மொக்தாரின் நியமனத்திற்கு மாமன்னர் அனுமதி அளித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளந்தான், மாச்சாங்கில் பிறந்து வளர்ந்தவரான 57 வயது டுசுக்கி மொக்தார், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்லைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவர் ஆவார். ஆஸ்திரேலியவில் வோலோங்கோங் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சட்டத்துறை அலுவலகத்தில் கடந்த 31 ஆண்டு காலமாக பணிாயற்றி வருகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →