Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை திட்டம், 3 மாதத்திற்கு ஒத்திவைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.25-

தாதியர்களுக்கான வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தாதியர்களுக்கான 45 மணி நேர வேலை முறை, வரும் மார்ச் முதல் தேதி சனிக்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிலுவையில் உள்ள விவகாரங்கள் காரணமாக இந்த உத்தேச வேலை முறை திட்டம், மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட், இன்று செவ்வாய்க்கிழமை, காலையில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் ஓர் அவசர சந்திப்பை நடத்திய போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தாம் ஒருவரே செனட்டர் என்று குறிப்பிட்ட டாக்டர் லிங்கேஸ்வரன், அதிகரித்து வரும் மருத்துவக் காப்புறுதிக் கட்டணம், சுகாதார சேவையில் உ ள்ள பணியாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை திட்டம் குறித்து தாம் பேசியதாகவும், அந்த நடைமுறை ஏற்புடையது அல்ல என்பதை அமைச்சரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

தம்முடைய இந்த வாதத்திற்கு பெந்தோங் எம்பி யாங் ஷேவூரா ஒத்மான், ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் இணக்கம் தெரிவித்ததாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை