மாது ஒருவர், வீட்டின் படிகட்டில் சில தனிநபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட காட்சியை கொண்ட காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பினாங்கு தீமோர் லவூட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சொஃபியான் சந்தோங் தெரிவித்துள்ளார். 39 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி நேற்று நள்ளிரவு விமான் விமான் என்ற பெயரில் முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருவதாக சொஃபியான் சந்தோங் சுட்டிக்காட்டினார். இச்சம்பவம் தொடர்பில் 51 வயது நபர் போலீசில் புகார் செய்துள்ளார். தாக்கப்பட்ட நபர்,தமது மகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டை விட்டு சென்றவர், பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை என்றும், நீண்ட இடைவெளிக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய போது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்றும் அந்த நபர் தமது போலீசில் புகாரில் தெரிவித்துள்ளார் என்றும் ஏசிபி சொஃபியான் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


