Sep 25, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா ஜைனுடின் நீடிப்பார்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா ஜைனுடின் நீடிப்பார்

Share:

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் தொடர்ந்து நீடிப்பார் என்றும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு பாஸ் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.

முன்னதாக, பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹம்சா ஜைனுடினுக்குப் பதிலாக, அகமட் சம்சூரி எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று பெரிகாத்தான் நேஷனல் உச்சமன்றம் அறிவித்திருந்த நிலையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

Related News