2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வேளையில் அரசாங்க ஊழியர்களுக்கு சராசரி 300 வெள்ளி சம்பள உயர்வு கோரி, பரிந்துரை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைத்துறை பணியாளர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டு காலமாக எந்தவொரு சம்பள உயர்வின்றி அரசாங்க ஊழியர்கள் இருப்பதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் தெரிவித்தார். இந்நிலையில் மக்களின் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் அட்னான் குறிப்பிட்டார்.








