கோலாலம்பூர், ஜனவரி.16-
முன்னாள் கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர், காலஞ்சென்ற டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் மீதான 2.8 மில்லியன் ரிங்கிட் தொடர்புடைய மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்து sessions நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
புங் மொக்தாருக்கு எதிரான வழக்கை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் இம்முடிவை அறிவித்தார்.
இருப்பினும், புங் மொக்தாரின் விதவை மனைவியான Datin Seri Zizie Izette A. Samad மீதான உடந்தை குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என அவர் முன்வைத்த கோரிக்கையை, சட்டத்துறை அலுவலகம் நிராகரித்ததையடுத்து இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
Zizie Izette மீதான வழக்கின் மேல் விசாரணைக்காக, எதிர்வரும் மார்ச் 5, 6 மற்றும் 12 ஆகிய தேதிகளை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.








