நிபோங் திபால், செப்டம்பர்.14-
மெட்ரிகுலேஷன், எஸ்டிபிஎம் குறித்த விவாதங்களை உடனடியாக நிறுத்தும்படி மலேசியக் கல்வி அமைச்சு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் பொது பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதால், இவற்றைப் பற்றிய விவாதங்கள் தேவையற்ற குழப்பங்களை உருவாக்குகின்றன என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (UMANY) மெட்ரிகுலேஷன் திட்டத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இரண்டு திட்டங்களும் தத்தம் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன என்றும், அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கல்வி அமைச்சர் விளக்கமளித்தார்.








