Mar 13, 2026
Thisaigal NewsYouTube
லவ் ஸ்கேம் மோசடியில் சிக்கிய மாது 25 லட்சம் வெள்ளியை இழந்தார்
தற்போதைய செய்திகள்

லவ் ஸ்கேம் மோசடியில் சிக்கிய மாது 25 லட்சம் வெள்ளியை இழந்தார்

Share:

தன்னை கொரியப் பிரஜை என்று அடையாளம் கூறிக்கொண்டு இன்ஸ்டாகிராம் தொடர்பில் இருந்த ஆடவரின் காதல் வலையில் விழுந்ததாக நம்பப்படும் தனியார் நிறுவனம் ஒன்றின் பெண் நிர்வாகி, தமது வாழ்நாள் சேமிப்பான 25 லட்சம் வெள்ளி இழந்துள்ளார்.

இத்தாலியில் தொழில் புரிவதாக கூறி அந்த மாதுவுடன் ஓன்லைன் தொடர்பில் மிக நெருக்கமாக இருந்ததாக நம்பப்படும் அந்த ஆடவர், தனது தொழிலில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, மோசடி செய்துள்ளார் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சபா போலீஸ் ஆணையர் டத்தோ ஜெயதேஹ் டிகுண் தெரிவித்துள்ளார்.

கோத்தா கினபாலுவில் பெரிய நிறுவனம் ஒன்றில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் 46 வயதுடைய அந்த மாது, இவ்வாண்டு மே மாதத்திற்கும் ஜுலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த ஆடவர் அனுப்பிய 24 வெவ்வேறு வங்கி கணக்குகளில் 25 லட்சத்து 31 ஆயிரம் வெள்ளியை பட்டுவாடா செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தைப் பெற்றப்பின்னர் அந்த ஆடவர் தொடர்பிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்த அந்த மாது போலீசில் புகார் செய்து இருப்பதாக டத்தோ ஜெயதேஹ் டிகுண் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!