Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ருக்குன் நெகாரா கோட்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

ருக்குன் நெகாரா கோட்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

மலேசிய மக்கள் அனைவரும் நாட்டின் தேசியக் கோட்பாடான 'ருக்குன் நெகாரா'வின் சிறப்புகளை தங்களின் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சீல் கேட்டுக் கொண்டார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இஸ்தானா நெகாரா விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபாஹ்மி இதனைத் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணுவதற்கு மாமன்னரின் இந்த அறிவுரை மிக முக்கியமானது என்று அமைச்சர் கூறினார். குறிப்பாக, நாட்டின் இருண்ட பக்கங்களில் ஒன்றான மே 13 சம்பவத்தை மாமன்னர் நினைவூட்டியுள்ளதை அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், தேர்தல் காலங்களில் தங்களின் சுயவிளம்பரத்திற்காக அரசியல் தலைவர்கள் உணர்ச்சிகரமானப் பிரச்சினைகளைத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொது வெளியில் பேசும்போது கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாமன்னர் விடுத்த அழைப்பை அரசியல்வாதிகள் அனைவரும் ஏற்று நடப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி தெரிவித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு