Jun 12, 2026
Thisaigal NewsYouTube
அரச மலேசிய ஆகாயப்படை  தினம்: பகாங் சுல்தான் மற்றும் தெங்கு அம்புவான் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

அரச மலேசிய ஆகாயப்படை தினம்: பகாங் சுல்தான் மற்றும் தெங்கு அம்புவான் வாழ்த்து

Share:

குவாந்தான், ஜூன்.01-

2026-ஆம் ஆண்டுக்கான அரச மலேசிய ஆகாயப் படை தினத்தை முன்னிட்டு, பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா மற்றும் தெங்கு அம்புவான் துங்கு அஜிசா ஆகியோர் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

நாட்டின் வான் எல்லையைப் பாதுகாப்பதிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதிலும் ஆகாயப் படை வீரர்கள் காட்டும் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தேசப்பற்றை அவர்கள் மனதாரப் பாராட்டினர். நேர்மையுடனும், துணிச்சலுடனும் தொடர்ந்து தாய் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க சேவை செய்ய வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தேசிய பாதுகாப்புப் படையினரின் தொடர் தயார் நிலையே நாட்டின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அடித்தளம் எனக் குறிப்பிட்ட அவர்கள், அனைத்து விமானப்படை வீரர்களும் நல்ல ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் வாழப் பிரார்த்திப்பதாகக் கூறினர்.

Related News