Jun 1, 2026
Thisaigal NewsYouTube
‘ஓப்ஸ் கெசான் 6.0': அதிக லாபம் ஈட்டும் வணிகர்களுக்கு எதிராக சிலாங்கூர் கேபிடிஎன் அதிரடி
தற்போதைய செய்திகள்

‘ஓப்ஸ் கெசான் 6.0': அதிக லாபம் ஈட்டும் வணிகர்களுக்கு எதிராக சிலாங்கூர் கேபிடிஎன் அதிரடி

Share:

ஷா ஆலாம், ஜூன்.01-

உலகளாவிய விநியோகப் பற்றாக்குறை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி வணிகர்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்க, இன்று முதல் 'ஓப்ஸ் கெசான் 6.0' (OPS KESAN 6.0) அதிரடி சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநர் முஹமட் ஹானிஃப் பின் அஸாரி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும் இச்சோதனையின் முதல் நாளில், காய்கறிகள் மற்றும் முட்டை உள்ளிட்ட 46 வகையான அத்தியாவசியப் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. விலையேற்றம் குறித்து விளக்கம் கேட்டு 9 வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விலை கையாடல் செய்யும் தனிநபர்களுக்கு 1 லட்சம் ரிங்கிட் வரை அபராதமும், நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என எச்சரித்த இயக்குநர் முஹமட் ஹானிஃப், பயனீட்டாளர்கள் இது குறித்த புகார்களை e-Aduan KPDN .gov.my இணையப்பக்கம் அல்லது 019-848 8000 என்ற வாட்ஸ்அப் எண் வழியாக அனுப்பலாம் எனக் கேட்டுக் கொண்டார்.

Related News