Jun 1, 2026
Thisaigal NewsYouTube
குனோங் பத்து பூத்தேவில் மாயமான மலையேற்ற வீராங்கனை: தேடுதல் வேட்டையில் இணையும் ஓராங் அஸ்லி சமூகம்
தற்போதைய செய்திகள்

குனோங் பத்து பூத்தேவில் மாயமான மலையேற்ற வீராங்கனை: தேடுதல் வேட்டையில் இணையும் ஓராங் அஸ்லி சமூகம்

Share:

தாப்பா, ஜூன்.01-

கடந்த மே 24 முதல் தாப்பா, குனோங் பத்து பூத்தே மலையில் மாயமாகியுள்ள 49 வயது மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுடினைத் தேடும் பணியில், நாளை ஜூன் 2 முதல் உள்ளூர் ஓராங் அஸ்லி மக்கள் ஈடுபடவுள்ளனர்.

கம்போங் ஓராங் அஸ்லி அம்பாங் வோவைச் சேர்ந்த 22-க்கும் மேற்பட்டோர் சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட காட்டுப் பகுதிகளில் தேடுதல் நடத்தவுள்ளதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குனர் டத்தோ சாயானி சைதோன் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாளாக நீடிக்கும் இந்தத் தேடுதல் வேட்டையின் சுற்றளவு தற்போது சுருக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அப்பகுதியில் கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால், தேடுதல் குழுவினர் புதிய பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News