Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தமிழக சட்டமன்ற தேர்தல்: 84% மேற்பட்ட வாக்குப்பதிவு – அமைதியான முறையில் நிறைவு
தற்போதைய செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: 84% மேற்பட்ட வாக்குப்பதிவு – அமைதியான முறையில் நிறைவு

Share:

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாநிலம் முழுவதும் அமைதியாகவும் சீராகவும் நடைபெற்றது.

வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

பெண்கள், முதியவர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்த இளைஞர்களின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 70% வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாலை 5 மணி அளவில் இது 82.24% ஆக உயர்ந்தது.

இந்நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி, முதற்கட்ட கணக்கீட்டின் படி சுமார் 84.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களை விட, இந்த முறை அதிக வாக்குப்பதிவு பதிவாகி வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News