Jan 22, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், முதிவருக்கு ஓராண்டு சிறை
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், முதிவருக்கு ஓராண்டு சிறை

Share:

தமது அண்டை வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஒருமுன்னாள் ரப்பர் பால் மர வெட்டுத் தொழிலாளியான 78 வயதுடைய ஹருன் தஹ்மான் என்ற அந்த முதியவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்த பெர்லிஸ், கங்கார் செஷன்ஸ் நீதிமன்ற முடிவை மூவர் அடங்கிய நீதிபதி குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ வசீர் ஆலம் மைடின் மீராரத்து செய்தார்.

குற்றச்சாட்டிலிருந்து முதியவரை விடுதலை செய்து இருக்கும் கங்கார் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு செய்துள்ள மேல்முறையீட்டில் தகுதிபாடு இருப்பதாக நீதிபதிகள் டத்தோ எஸ்.எம். கோமதி மற்றும் டத்தோ எம். குணாளன் ஆகியோருடன் மேல்முறையீட் டை செவிமடுத்த நீதிபதி டத்தோ வசீர் தமது தீரப்பில் தெரிவித்தார்.

Related News