Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு

Share:

தீபகற்ப மலேசியாவில், 14 இடங்கள், சபாவில் 2 இடங்கள் மற்றும் சரவாக்கில் ஓரிடம் என மொத்தம் 17 இடங்களில் வெப்பமான வானிலை காரணமாக படிநிலை 1 எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா வெளியிட்டுள்ள தகவலின்படி, பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், கோலாலம்பூர், சபா, சரவாக் மாநிலங்களில் முக்கிய பகுதிகளில் இந்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிலாங்கூரில் கோம்பாக், சிப்பாங் உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலையானது படிநிலை 1-ஐ எட்டியுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவானால் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை வழங்கப்படும் என்றும் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

Related News