Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்

Share:

கிளந்தான், மார்ச் 2 -

இரு கார்கள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் கிளந்தான், குவாலா கெராய் ,ஜாலான் குவா மூசாங் குவாலா கெராய் சாலையில் கம்பூங் பாஹி யில் நிகழ்ந்தது.

ப்ரொடுவா மைவி மற்றும் னிசான் மார்ச் கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மேலும் நால்வர் காயங்களுக்கு ஆளாகினர் என்று கோல கிராய் மாவட்ட தீயணைப்பு, மீட்புப்படை நிலையத் தலைவர் னிக் அகமட் அப்ஷாம் னிக் பா தெரிவித்தார்.

இவ்விபத்தில் மைவி காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News