Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பாடாங் மேஹாவில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை - 16 வெளிநாட்டவர்கள் கைது!
தற்போதைய செய்திகள்

பாடாங் மேஹாவில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை - 16 வெளிநாட்டவர்கள் கைது!

Share:

கூலிம் பாடாங் மேஹா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் இன்று அதிகாலை மலேசிய குடிநுழைவுத் துறை, 'ஓப்ஸ் சாப்பு' என்ற நடவடிக்கையின் கீழ், திடீர் சோதனைகளை நடத்தியது.

இரண்டு மாடிகளைக் கொண்ட இரட்டை கட்டிடங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கி இருந்ததுடன், முன்புறம் மளிகைக் கடையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நடவடிக்கையானது, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அதிகாலை 1.20 மணியளவில் சுமார் 30 அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டதாக, கெடா குடிநுழைவுத்துறை செயல்பாட்டுப் பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மேன் எஃபெண்டி தெரிவித்தார்.

மொத்தம் 33 வெளிநாட்டவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், சீனா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 16 பேர் குடிநுழைவுச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் சிக் பகுதியில் உள்ள பெலாந்திக் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட உள்ளனர்.

அவர்கள் அனைவரையும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 (155) – பிரிவு 56(1)(d) -இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முதலாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related News

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை