கோலாலம்பூர், ஜூலை.23-
வரும் சனிக்கிழமை கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் துருன் அன்வார் பேரணி தொடர்பில் போலீசார் 60 புகார்களைப் பெற்றுள்ளதாக கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கச் சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தொடக்கத் தகவல்கள் கூறுகின்றன.
மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும், தலைநகரில் போக்குவரத்து நிலைக்குத்தாமல் இருப்பதற்கும் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்படி டத்தோ முகமட் உசோஃப் ஆலோசனைக் கூறியுள்ளார்.








