பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.11-
இந்திய சமூகத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட உரிமம் தொடர்பான ஒரு புதிய முன்முயற்சித் திட்டத்தை அரசாங்கம் தொடங்கவிருப்பதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.
புதுமையான இத்திட்டம், பெர்பாடானான் நேஷனல் பெர்ஹாட்டின் கீழ் தனது அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டு இம்மாத இறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், தனது அமைச்சகத்தால் வழங்கப்படும் நிதியுதவியுடன், இந்திய சமூகத்தைச் சேர்ந்த நிறுவன உரிமையாளர்களும், உரிமம் எடுப்பவர்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பயனடைவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.








