தாவாவ், நவம்பர்.10-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அக்கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.
சபா மாநிலம் வழங்கக்கூடிய வருவாயில் அந்த மாநிலத்திற்கு 40 விழுக்காடு திருப்பித் தரப்பட வேண்டும் என்று அண்மையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நாளை சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமே தவிர அமைச்சரவை மாற்றம் குறித்து அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அதே வேளையில் உயர் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது என்பதே தமது நிலைப்பாடாக உள்ளது என்று பிரதமர் விளக்கினார்.








