மூவார், நவம்பர்.26-
இரண்டு டிரெய்லர்கள் மற்றும் ஒரு லோரி சம்பந்தப்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்129.9 ஆவது கிலோமீட்டரில் மூவாருக்கு அருகில் நிகழ்ந்தது. இதில் 23 மற்றும் 24 வயதுடைய லோரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மரணமுற்றதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.
தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.








