Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போலீசாரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக முன்னாள் பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா  குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

போலீசாரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக முன்னாள் பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

போலீஸ்காரரர் ஒருவர் கடமையாற்றுவதற்குத் தடங்களாகவும், இடையூறாகவும் இருந்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா என்ற ஷீலா ஷெரோன் ஸ்டீவன் குமார், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டவரான 37 வயதுடைய இன்ஸ்பெக்டர் ஷீலா, ஏற்கனவே போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நிலையில், மற்றொரு புதிய சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவரின் பணிக்குத் தடங்கலாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிஃபின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஷீலா, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்திற்கு முன்புறம், சௌ கிட் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த லான்ஸ் காப்பரல் அந்தஸ்தைக் கொண்ட 37 வயது மால்விண்டர் சிங் தீராத் சிங் என்ற போலீஸ்காரின் பணிக்கு இடையூறு விளைவித்தாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 186 ஆவது பிரிவின் கீழ் இன்ஸ்பெக்டர் ஷீலா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து இன்ஸ்பெக்டர் ஷீலா விசாரணை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 7 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்குமாறு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஹென்ச் கோ நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த ஷீலாவின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம், 500 ரிங்கிட் ஜாமீனை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். காரணம், ஷீலாவிற்கு எதிராக கோலாலம்பூர் மற்றும் செலாயாங் ஆகிய இரண்டு செஷன்ஸ் நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் இருப்பதாகவும், நீதிமன்ற விசாரணைக்கு ஷீலா, தொடர்ந்து ஆஜராகி வருவதையும் மனோகரன் மலையாளம் சுட்டிக் காட்டினார்.

ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகளான ஷீலாவிற்கு ஜாமீன் தொகை குறைக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

எனினும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,600 ரிங்கிட் ஜாமீனில் ஷீலாவை விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவ்வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆ ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்