தமது காதல் நிராகரிக்கப்பட்டதை அறிந்த நபர் ஒருவர், விரக்தியினால் தமது காதலி வேலை செய்து வந்த கடைக்கு தீயிட்டு, ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை தெலுக் இந்தான், லங்காப், ஜாலான் பெசாரில் நிகழ்ந்தது. மது போதையில் இருந்ததாக நம்பப்படும் 54 வயதுடைய நபர், அந்தக் கைப்பேசி கடையில் வேலை செய்து வந்த 46 வயதுடைய தமது காதலியிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்த இந்த நாச வேலையைச் செய்துள்ளார் என்று ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்துள்ளார்.
இத்தீயினால் அந்தக் கைப்பேசி கடையில் சுமார் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்கள் அழிந்துள்ள வேளையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டள்ளார் என்று அமாட் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் இலவச சட்ட ஆலோசனை


