Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவகுமார் பதவி விலகியாக வேண்டும்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவகுமார் பதவி விலகியாக வேண்டும்

Share:

லஞ்ச ஊழல் விசாரணைக்கு ஆளாகியுள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று பாசீர் கூடாங் பி.கே.ஆர். எம்.பி. ஹசான் அப்துல் கரிம் விடுத்துள்ள கோரிக்கை, ஏற்புடையதே என்று மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் என்பது புரையோடிக்கொண்டு இருக்கும் புற்று நோயைப் போன்றது. அது நாட்டையே அழித்து விடும். அத்தகைய லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அரசியல் தலைவர்கள், அவர்கள் மீதான விசாரணை முடிவு தெரியும் வரையில் விடுப்பில் அல்லது பதவி விலகுவதே உத்தமம் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள்தான், லஞ்ச ஊழலுக்கு எதிராக முதலில் போராடினார்கள். ஆனால், ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்காக பாரிசான் நேஷனலுடன் கூட்டு சேர்ந்த போது ஊழல் என்ற புற்று நோயின் மூலத்தை அவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர். தற்போது புற்று நோய் புரையோடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நடைமுறைகளை ஒழிக்க நாட்டுக்குப் புதிய தலைவர்கள் தேவை என்ற ஓர் ஆணித்தரமான செய்தியை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் மக்கள் சேவகர் ஆவார். ஒரு சேவகரைப் போல அவர்கள் செயல்பட வேண்டும், சேவையாற்ற வேண்டும். இங்கு பி.கெ.ஆர். , ஜசெக அல்லது அமானா என்பது முக்கியம் அல்ல. அதிலும் பாரிசான் நேஷனல் எம்.பி.யின் நிலையை முன்மாதிரியாக கொள்ள முடியாது என்பதற்கு நிலுவையில் உள்ள துணைப் பிரதமர் வழக்கு ஓர் உதாரணமாகும். இரண்டு தவறுகள் ஒரு விஷயத்தைச் சரி செய்து விடாது.

உ ண்மை நிலைநாட்டப்படும் வரை இவ்விவகாத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க தாம் தயங்கப் போவதில்லை என்று டாக்டர் சிவபிரகாஷ் சூளுரைத்துள்ளார்.

Related News