Oct 16, 2026
Thisaigal NewsYouTube

32.8 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை பெற்றார் பிரதமர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
32.8 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை பெற்றார் பிரதமர்

சோல், நவ. 26-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தென்கொரியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டது மூலம் 32.8 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சாத்தியமான முதலீடுகளை மலேசியாவிற்கு பெற்றுள்ளார்.

தம்முடைய இந்தப் பயணம், மலேசியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை கட்டிக்காப்பது என்றாலும் இந்தப் பயணத்தின் வாயிலாக இதுவரையில் பெரிய அளவிலான சாத்தியமான முதலீடுகள் அடையாளம் காணப்பட்டு, பெறப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தம்முடைய தென்கொரியா பயணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்துடன் தென் கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களை கவரக்கூடிய வாய்ப்பையும் தந்துள்ளது என்று தென்கொரியா தலைநகர் சோலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →