Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஜாலான் கூச்சிங் விபத்தில் 5 வயது சிறுமி பலி: விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜாலான் கூச்சிங் விபத்தில் 5 வயது சிறுமி பலி: விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், ஜாலான் கூச்சிங்கில் ஆறு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, அடுத்தகட்ட நடவடிக்கைக்காகத் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த சனிக்கிழமை, சிகாம்புட் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, சிறுமி தனது தந்தையுடன் பயணித்த காரின் பின்புறத்தில் மற்றொரு கார் மோதியது. பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 24 வயது ஆண் ஓட்டுநர், சம்பவ இடத்தை விட்டுச் சென்ற பின்னர் டாமன்சாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளையதிர்ச்சிக்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணை முடிக்கப்பட்டு வருவதாகவும், ஓட்டுநரின் உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஜம்சுரி முகமது ஈசா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்