கோலாலம்பூர், ஜூலை.18-
ஜுலை மாதம் முதல் தேதியிலிருந்து எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரி விரிவுப்படுத்தப்பட்டதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் கிளை, பொறுப்பற்ற வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி விடாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு கடந்த ஜுலை முதல் தேதியிலிருந்து இன்று ஜுன் 18 ஆம் தேதி வரை ஓப்ஸ் கெசான் 4.0 சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி வருகிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் 18 நாட்களில் 120 வர்த்தக வளாகங்களில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கேபிடிஎன் எனப்படும் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனையில் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவின் தலைமை அதிகாரி முகமட் ஹனிஸான் கெச்சேலும் நேரடியாகப் பங்கு கொண்டு சோதனையிட்டு வருகிறார்.








