காவல்துறையின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் புள்ளி விவரப்படி, இந்த ஆண்டு சனவரி முதல் செப்டம்பர் வரையிலான 19 ஆயிரத்து 224 ஆன்லைன் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் 23 அதிகம் என தொடபு, பல்லூடக, மின்னிலக்க துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
அதே சமயம், CyberSecurity Malaysia வின் கீழ் இயங்கும் Cyber999இன் தகவலின்படி,இவ்வாண்டு சனவரி முதல் அக்டோபர் வரையில், சைபர் பாதுகப்பு குறித்து 4 ஆயிரத்து 898 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி மோசடி குறித்து நாடளாவிய நிலையில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறானக் குற்றத்தால் நாட்டிற்கு கோடிக் கணக்கில் நட்டம் ஏற்படுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தையும் கொடுக்கிறது என்றார் அவர்.
படித்த பட்டதாரைகள் முதல் வயோதிகர் வரை அனைத்துத் தரப்பும் எமாற்றப்பட்ய்கிறார்கள். எனவே, அனைவரும் விழிப்புடன் இருந்து அமைச்சுடன் இணைந்து இவ்வாறான குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.








