Sep 27, 2026
Thisaigal NewsYouTube
படுக்கையில் இருக்கும் தந்தைக்காகப் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் மாணவி: தாய்லாந்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்
தற்போதைய செய்திகள்

படுக்கையில் இருக்கும் தந்தைக்காகப் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் மாணவி: தாய்லாந்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்

Share:

16 ஆண்டுகளாகப் படுக்கையிலேயே இருக்கும் தனது தந்தைக்காக, பள்ளி முடிந்ததும் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து விற்கும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சேர்ந்த 15 வயதுச் சிறுமி பென்யாபா பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஏர்-கண்ட் பழுதுபார்க்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தால் முடங்கிய தந்தைக்குப் பணிவிடைகள் செய்துவிட்டு, வீதிகளில் பாட்டில்கள் சேகரிக்கும் பென்யாபா, வாரத்திற்கு சுமார் 100 பாத் வருமானம் ஈட்டுகிறார். "இந்த வேலைக்காக நான் வெட்கப்படவில்லை; தந்தையைக் காப்பதே என் கடமை" என அவர் கூறுவது சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களைத் தொட்டுள்ளது.

குடும்ப வறுமையிலும் கல்வியில் சளைக்காத அவர், சமீபத்திய தேர்வில் 3.75 GPA பெற்று வகுப்பில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவரது கல்விச் செலவுக்கு உதவ தற்போது பலரும் முன்வந்துள்ளனர். இந்தச் சிறுமியின் மன உறுதி பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

Related News