Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆண்கள் நுழைவதை தடுப்பதற்கு பரிந்துரை சமர்ப்பிப்பு
தற்போதைய செய்திகள்

ஆண்கள் நுழைவதை தடுப்பதற்கு பரிந்துரை சமர்ப்பிப்பு

Share:

Prasarana Malaysia Berhad நிறுவனம், தனது சேவையில் ஈடுபடுத்தும் பெண்களுக்கான ரயில் பெட்டிகளில் ஆண்கள் நுழைந்து விடாமல் தடுப்பதற்கு ஒவ்வொரு நிலையத்திலும் உதவியாளர் ஒருவர் கடமையில் அமர்த்தப்பட வேண்டும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி பரிந்துரை செய்துள்ளார்.

பெண்களுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளில் நுழையும் ஆண் பயணிகளுக்கு எதிராக தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை. ஆனால், பெண்களின் தனிமை சூழலுக்கு குந்தகம் எதுவும் விளைவிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் அந்த ரயில் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நன்ஸி சுக்ரி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் மகளிர்களுக்கான பிரத்தியேக ரயில் பெட்டிகளில் ஆண்கள் நுழைந்து விடாமல் இருப்பதற்கு ரயில் நிலையித்தில் அதிகாரிகள் கண்காணித்து வணணம் இருப்பபார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related News