நாட்டில் மலேசியர்களிடையே வறிய நிலையைப் போக்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் அவரின் இந்த முயற்சியில் இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களிலும் ஒற்றுமை அரசாங்கம் கடந்த பத்து மாத காலமாக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் அதிகமானோர் மலாய்க்காரர்கள் என்று பிரதமர் வகைப்படுத்திய போதிலும் விகித்தாச்சாரம் அளவில் இந்தியர்களே அதிகளவில் வறுமையில் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியர்களிடையே வறுமை ஒழிப்பின் முன்னெடுப்புகளின் ஒன்றாக தமது தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் மூலமாக மலேசிய சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவர்களின் தொழில் திட்டங்களுக்கு உதவும் வகையில் தெக்குன் மூலமாக 30 கோடி வெள்ளி மதிப்பில் ஒரு நிதி உருவாக்கப்பட வேண்டும் என்பது தங்களின் இலக்காக இருந்து வருகிறது என்று துணை அமைச்சர் சரஸ்வதி கந்தாமி தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பி.கே.ஆர் தலைமையகத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தமது அமைச்சின் மூலமாக இந்தியர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார். இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பி.கே.ஆர் சார்பில் செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் குணராஜ்ஜும் கலந்து கொண்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


