May 24, 2026
Thisaigal NewsYouTube
டீசல் கடத்தல், அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் கைது
தற்போதைய செய்திகள்

டீசல் கடத்தல், அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-

சரவா, சிபு- வில் டீசல் எண்ணெய்யை கடத்தும் கும்பலிடம் லஞ்சம் பெற்று வந்ததாக நம்பப்படும் அரசாங்க அமலாக்க ஏஜென்சி ஒன்றின் இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

சரவா, கூச்சிங்கை தளமாக கொண்டு செயல்படும் அந்த அமலாக்க ஏஜென்சியின் 40 வயது மதிக்கத்தக்க இயக்குநர் நேற்று சரவாக், SPRM அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாக SPRM வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த இயக்குநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஒரு நபர் உத்தரவாதத்துடன் SPRM ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் விவரித்தன.

Related News