காஜாங், செப்டம்பர்.13-
மாதுவின் காரை மோதித் தள்ளிய பின்னர், அவரைத் தாக்குவது போல் மிரட்டல் விடுத்துச் சென்ற நபரை காஜாங் மாவட்ட போலீசார் தேடி வருகின்றனர். காரைச் செலுத்திய மாதுவை அச்சுறுத்தும் அந்த நபரின் செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் தேடப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து 31 வயதுடைய பெண் நிர்வாகி போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








