மதம் மாறிய தமது கணவர் நாகேஸ்வரன் முனியான்டியை விவாகரத்து செய்வது தொடர்பில், தனித்து வாழும் தாயாரான லோவ் சியூவ் ஹொங் தொடுத்துள்ள வழக்கில் குறுக்கிடுவதற்கு, பெர்லிஸ் மாநில சமய இலாகாவிற்கு அனுமதி வழங்கியுள்ள அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த மாது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இதன் மீதான வழக்கு விசாரணை, வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று கூட்டரசு நீதிமன்ற துணைப் பதிவதிகாரி அறிவித்துள்ளார்.
தமது 3 பிள்ளைகளைத் தமக்கு தெரியாமல், ஒரு தலைபட்சமாக மதம் மாற்றியுள்ள தமது கணவர் நாகேஸ்வரன் முனியான்டியின் நடவடிக்கை எதிர்த்து, அந்தத் தனித்து வாழும் தாயார், முழுவீச்சில் சட்டப் போராட்டம் நடத்து வருகிறார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


