Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரிடம் சிக்காமல் இருக்க உயிரை மாய்த்த அந்நிய பிரஜை
தற்போதைய செய்திகள்

போலீசாரிடம் சிக்காமல் இருக்க உயிரை மாய்த்த அந்நிய பிரஜை

Share:

ஜோர்ஜ்டவுன்,ஜன.22
கெலுகோர், பத்து உபான்- னில் உள்ள ஓர் அடுக்குமாடி கட்டடத்தின் 16 ஆவது மாடியிலிருந்து Nigeria ஆடவர் ஒருவர் கீழே குதித்து உயிரிழந்தார்.

நேற்றிரவு பினாங்கு காவல்படைத் தலைமையகமான போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது தப்பிச் சென்ற முயன்ற 37 வயதுடைய Nigeria பிரஜை மாடியிலிருந்து குதித்ததாக தெரியவந்துள்ளது.

தனியார் கல்லூரி மாணவரான அந்நபரின் உடல் இரண்டாவது மாடியின் தாழ்வாரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணியளவில் நடந்த இத்திடீர் சோதனையில் வீட்டு பகுதியில் போலீசார் இருப்பதை உணர்ந்து, ஆடவன் ஒருவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டதாக தீமோர் லாவுட், மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் எபி ஹாமிட் கூறினார்.

கதவை பூட்டிக் கொண்ட நபரும் மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்த ஆடவரும் ஒருவர் அல்ல என்பதை ரஸ்லாம் எபி விளக்கினார்.

இரவு 9:21 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து Nigeria ஆடவனின் உடலை மீட்க செய்து சவ பரிசோதனைக்கு பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது