Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கக்குவான் இருமல் கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போதைய செய்திகள்

கக்குவான் இருமல் கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

பகாங், ரொம்பின், கம்போங் பாஹாகியா வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கக்குவான் இருமல் கண்டு இருப்பதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபர் தெரிவித்தார்.

அந்த கக்குவான் இருமல், அந்த சிறார்களின் தாயாரிடமிருந்து பரவியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சுகாதார அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் என்று புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் ஜாலிஹா இதனை தெரிவித்தார்.

அதேவேளையில் நாட்டில் கக்குவான் இருமல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News