May 21, 2026
Thisaigal NewsYouTube
உயிரிழந்தவர் இந்தியப் பிரஜை ஆவார்
தற்போதைய செய்திகள்

உயிரிழந்தவர் இந்தியப் பிரஜை ஆவார்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 198 ஆவது கிலோ மீட்டரில் மலாக்கா, அலோர் காஜாவிற்கு அருகில் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்துக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த பெண்மணி இந்தியப் பிரஜை ஆவார்.

19 வயதுடைய Yafarah Taj Fakrudin Hussaini என்ற இந்தியப் பிரஜையே இச்சம்பவத்தில் தீக்காயங்ளுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார் என்று பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Arshad Abu தெரிவித்தார்.

இந்த விபத்தில் இதர நான்கு பயணிகள் தீயக்காயங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பிரஜை, Yafarah Taj, கடுங் காயங்களுடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது அந்த சுற்றுலா பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூர் பிரஜைகள் ஆவார்.

Related News