காஜாங், ஜனவரி.26-
காஜாங், தாமான் சுங்கை சுவா பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் இரு நபர்கள் பொது இடத்தில் மோதிக் கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர்களைக் காவற்படை தீவிரமாகத் தேடி வருகிறது. சம்பந்தப்பட்டக் காணொளியில், சட்டை அணியாத நபர் ஒருவர் மற்றொருவரைத் தாக்கி, அவர் மயக்கமடைந்த பின்னரும் ஆக்ரோஷமாக மிதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றும், மோதலுக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நாஸ்ரோன் அபுதுல் யுசோஃப் தெரிவித்துள்ளார். இந்த விபரீத மோதல் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், உடனடியாகக் காவற்படைக் கட்டுப்பாட்டு மையத்தையோ அல்லது விசாரணை அதிகாரியையோ தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








