Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பேராக் கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடும் மலாயன் புலி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பேராக் கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடும் மலாயன் புலி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Share:

பேராக் மாநிலம், பெங்காலான் ஹுலு அருகே உள்ள கம்போங் செலாரோங் கிராமத்தில், புலி ஒன்று கால்நடைகளைத் தாக்கியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அப்பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட கால்நடை ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இது அப்பகுதியில் பதிவான மூன்றாவது புலித் தாக்குதல் சம்பவம் என்று பெங்காலான் ஹுலு மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2025-ஆம் ஆண்டு மே 23 மற்றும் ஜூன் 11 ஆகிய தேதிகளில் இரண்டு சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய சம்பவ இடத்தை ஆய்வு செய்த பெர்ஹிலிடான் எனப்படும் வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை அதிகாரிகள், மாட்டின் கழுத்தில் காணப்பட்ட காயங்கள் மலாயன் வகை புலியின் தாக்குதல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News