லஞ்ச உழல், அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் தனிநபர் அல்லது அரசியல் கட்சி என பார்ப்பதில்லை. மாறாக, விசாரணையின் தன்மையை அடிப்படையாக கொண்டே எஸ்.பி.ஆர்.எம் மின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைகிறது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசினின் வழக்கறிஞர் நிறுவனங்களில் எஸ்.பி.ஆர்.எம் திடீர் சோதனை மேற்கொண்டு இருப்பது தொடர்பில் கருத்துக்கையில் அஸாம் பாக்கி மேற்கண்டவாறு கூறினார்.








