Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இன ஏற்றத் தாழ்வு களையப் படவேண்டும் – துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இன ஏற்றத் தாழ்வு களையப் படவேண்டும் – துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர்,செப்டம்பர் 02-

நம் நாடு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்றால், பலமிக்க நாடாக உருவாக வேண்டும் என்றால், இனங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வு கண்டிப்பாக களையப்பட வேண்டும் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

மலேசியா விடுதலை பெற்றதில், பல இன மக்கள் ஒருங்கிணைந்து பெரிய பங்காற்றியுள்ளனர். பல்வேறு இன மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமித்த செயல்பாடுகள் மலேசியா உருவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் துணையாக இருந்து வந்துள்ளது. இது தொடர வேண்டும் என்றால் சமூகங்களிடையிலான ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும். அதை முழுமையாக செயல் படுத்த வேண்டும் என்ற நோக்கில் மடானி ஒற்றுமை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறத்து என துணையமைச்சர் சரஸ்வதி சரஸ்வதி மேலும் கூறினார்.

ஒரு நாட்டில் நிகழக்கூடிய ஏற்றத்தாழ்வு, நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடும். இதை கருத்தில் கொண்டு அரசாங்க கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். அதே வேளையில் அனைத்து அரசு முயற்சிகளுக்கும் இன சாயம் பூசக் கூடாது என அவர் வலியுறுத்தினார். மலேசியாவின் பல்வேறு இன மக்களின் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை காக்கவும், சிரமங்களைப் பார்வையிடவும் தீர்வுகளை ஆராயவும் பாகுபாடு இல்லாத இன ஏற்றத்தாழ்வு மாநாடு கோலாலம்பூரில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பொழுது துணையமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இவ்வாண்டு 12ஆவது முறையாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் முக்கியத்துவம், அனைத்து.

மக்களுக்கும் சம வாய்ப்புகளை கொடுத்து ஒற்றுமையை வலுப்படுத்தவும்Top of Form நாட்டின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவும் பரிந்துரைகளை வழங்கும் என அவர் கூறினார்.

இம்மாநாட்டில் கோமாஸ் மையத்தின் இயக்குநர் ஜெரால்டு ஜோசப், சிலாங்கூர் மாநில சபாநாயகர் லாவ் வெங் சான், பினாங்கு இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிகுழு உறுப்பினர் யல் கூய் ஜி சென், மனிதவள அமைச்சின் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி பின் தாவுத், மலேசிய தொடர்பு மற்றும் பன்மொழி ஆணையத்தின் துணை மேலாண்மை இயக்குநர் டத்தோ சுல்கர்னைன் பின் முகமது யாசின், திரங்கானு சட்டமன்ற செயலாளர் துவான் அஜி சுவ்ஸ்லான் பின் அவாங்க், உளவுத்துறை இயக்குனர் மற்றும் தேசிய நெருக்கடி மேலாண்மை பிரிவு இயக்குநர் தாஜுல் அரிஃபின் பின் முஹம்மது, கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வெய், மலேசிய மனிதவள மன்றத்தின் தலைமை செயல் அதிகாரி அருள்குமார் சிங்காரவேலு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →