கோலாலம்பூர், ஜூலை.21-
ஸ்டீவன் சிம் தலைமையில் செயல்படும் மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக் கழகமான எச்ஆர்டி கோர்ப்பின் தலைமை செயல்முறை அதிகாரியாக சையிட் அல்வி முகமட் சுல்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகிய ஷாஹுல் ஹமீட் ஷைக்கிற்கு பதிலாக சையிட் அல்வி நியமிக்கப்பட்டுள்ளார். 51 வயதான சையிட் அல்வி, நிதிச் சேவை, வங்கி தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ஆலோசனை முதலிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் சையிட் அல்வி, பெரும் தூணாக விளங்கியவர் ஆவார்.








