கோலாலம்பூர், நவம்பர்.11-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில், நேற்று ஏற்பட்ட நில அமிழ்வு காரணமாக சாலையில் தோன்றிய குழி பழுது பார்க்கப்பட்டு, அச்சாலை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் மாலை 6.30 மணி வரையில், அச்சாலையில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றதாக கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில், சாலைக் கட்டமைப்பின் நிலைத்தன்மையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த நில அமிழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள டிபிகேஎல், பழுது பார்க்கும் பணியின் போது பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.








