கோலாலம்பூர், ஜனவரி.14-
இன்று புதன்கிழமை வர்த்தகத் தொடக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 0.2 விழுக்காடு வலுவடைந்துள்ளது. காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு RM4.06 என்ற அளவில் உயர்வு கண்டது.
மாலை 6 மணியளவில் வர்த்தக நேரத்தின் இறுதியில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு RM4.04 ஆகி வலுவடைந்தது. இதன் பொருள், 1 மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சுமார் 0.2469 அமெரிக்க டாலர் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது.








