May 4, 2026
Thisaigal NewsYouTube
டோஹா, ஜெட்டாவிற்கான விமானச் சேவைகள் மீண்டும் துவக்கம் - மலேசியன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

டோஹா, ஜெட்டாவிற்கான விமானச் சேவைகள் மீண்டும் துவக்கம் - மலேசியன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

Share:

தேசிய விமானச் சேவை நிறுவனமான மலேசியன் ஏர்லைன்ஸ் ஜெத்தா, மதீனா-விற்கான விமானச் சேவையை இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது.

இச்சேவையானது வரும் மார்ச் 8-ஆம் தேதி வரையில் தொடரும் என அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி அந்த வழித்தடங்களுக்கான விமானச் சேவை இரத்து செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், தோஹாவிற்கான விமானச் சேவையானது வரும் மார்ச் 7-ஆம் தேதி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும், அங்குள்ள பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, லண்டன் மற்றும் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையம் செல்லும் மற்ற அனைத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் கால அட்டவணைப்படி இயக்கத்தில் உள்ளன.

போர் நடக்கும் பகுதிகளிலிருந்து விலகி மாற்று வழித்தடங்களில் அவை இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்