கோலாலம்பூர், டிசம்பர்.21-
நாட்டின் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவலின்படி, வெறும் 11 மாதங்களில் தொலைத்தொடர்பு மோசடிகளால் மலேசியர்கள் 715 மில்லியன் ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளனர். இதில் வேதனை என்னவென்றால், தொழில்நுட்ப அறிவுமிக்க 21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இந்த மாய வலையில் சிக்கி அதிகளவில் பணத்தை இழந்து முதலிடத்தில் உள்ளனர்.
வெறும் பதின்ம வயது சிறுவர்கள் முதல் தள்ளாத வயது முதியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்காத இந்த ‘டிஜிட்டல் கொள்ளையர்களிடம்’ சிக்காமல் இருக்க பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவற்படை எச்சரித்துள்ளது. ஒரு வேளை பொதுமக்கள் ஏமாற்றப்பட்டால், பதற்றமடையாமல் உடனடியாக 997 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தேசிய மோசடி தடுப்பு மையத்திடம் புகார் அளிப்பதன் மூலம் உங்கள் பணத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம்.








