Jul 31, 2026
Thisaigal NewsYouTube
இந்தத் தவணை முடியும் வரை மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவை நிலைத்திருக்கும் ! - பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

இந்தத் தவணை முடியும் வரை மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவை நிலைத்திருக்கும் ! - பிரதமர் அன்வார் உறுதி

Share:

இன்று பிரதமரால் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் இந்தத் தவணை முடியும் வரை தொடர்ந்து நிலைத்திருக்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் தெரிவித்துள்ளார். இதனால் அரசாங்கத்தின் முழு கவனமும் நாட்டின் மேம்பாட்டிலும் சீரான நிர்வாகத்திலும் நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிர்வாகம் நிறைவடைந்துள்ள நிலையில், சில சீர்திருத்தங்களை செய்யும் நடவடிக்கையாக இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

பொருளாதார மேம்பாடு, மக்களின் பிரச்சனைகள், வாழ்க்கைச் செலவு போன்றவையின் கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் சொன்னார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சியின் மேல் மற்றத் தலைவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு, மாமன்னரின் அனுமதியையும் பெற்ற பின்னரே மக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

Related News