கிளந்தான், கோத்தா பாரு அருகே புலி நடமாட்டம் இருக்கும் நிலையில் அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து பீதியில் மூழ்கியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஜெலி நகரிலிருநூது குவா மூசாங் சென்று கொண்டிருந்த போது புக்கிட் மெரந்தோ அருகே ஒரு பெரிய புலி,சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்ததைத் பார்த்ததாக ஐஸ் லோரி ஓட்டுநர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
லோரியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் தம் கண்முன் புலியோன்று நடந்த செல்வதை தமது டேஸ்க் போட் கேமராவில் பதிவு செய்து, அந்த ஓட்டுநர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக 49 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
புக்கிட் மெரந்தோ மற்றும் குவா முசாங் ஆகிய பகுதிகளில் ஏராளமாக பூர்வகுடி கிராமங்கள் உள்ளன. புலி நடமாட்டம் காரணமாக அங்குள்ள மக்கள் தற்போது பெரும் பீதியில் மூழ்கியுள்ளனர்.








