Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தாயகம் திரும்பினார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

தாயகம் திரும்பினார் பிரதமர் அன்வார்

Share:

அமெரிக்கா, நியூயோர்க்கில் 4 நாட்கள் நடைபெற்ற ஐ.நாவின் 78 ஆவது பொதுப் பேரவையில் வெற்றிகரமாக கலந்து கொண்டப் பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தாயகம் திரும்பினார்.

தமது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுடன் பிரதமரை ஏற்றி வந்த சிறப்பு விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்ஙா ராயா கொம்ப்லெக்ஸ் தளத்தில் மாலை 5 மணியளவில் தரையிறங்கியது.

டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர்கள் குழுவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் மற்றும் இதர பிரமுகர்கள் வரவேற்றனர்.

Related News