கோலாலம்பூர், அக்டோபர்.13-
ஜோகூர் அரசப் பேராளரைத் திருணம் செய்து கொண்டதைத் போல போலியான திருமணப் பதிவுச் சான்றிதழைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மாடல் அழகி, இரண்டாவது மனோவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.
43 வயது பெர்சானா அவ்ரில் சொல்லுண்டா என்ற அந்த முன்னாள் அழகி, பேரா, உலு கிந்தா, தஞ்சோங் ரம்புத்தான் பஹாகியா மன நல மருத்துவமனைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த மருத்துவமனை வழங்கிய சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் பெண் இரண்டாவது மன நலச் சோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை என்று நீதிபதி ஷுஹைலா ஹரோன் தெரிவித்தார்.
அந்த முன்னாள் அழகி, நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் அளவிற்கு நல்லதொரு மன நிலையில் உள்ளார். அவருக்கு இனி மன நலப் பரிசோதனை தேவையில்லை என்று மருத்துவமனை தெரிவித்து இருப்பதை நீதிபதி சுட்டிக் காட்டினார்.
அதன் அடிப்படையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று நீதிபதி அறிவித்தார்.








